Following is the news item as appeared in Viduthalai of
26th January 2010 -
http://viduthalai.periyar.org.in/20100126/news12.html
கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார்
மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக
பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர்
விளக்கம்

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி
இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை
ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும்
செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர்,
தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.
தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு
தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க
வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய
வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில்
சொல்லப்பட்டிருக்கிறது.
மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய
தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை
முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு
செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை
எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்
தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி
வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா?
தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம்
வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி
எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.
பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.
இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை
தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது
கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.
பெரியார் இயக்கத்தில் இல்லாமல்
இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு
செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும்
சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.
இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர
வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார்
சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே
எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக
ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள்
சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன்
என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல்
வேறொன்-றும் கிடை-யாது.
பணத்தை விரும்பியதுண்டு
அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை
அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப்
பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா
வாங்கிக்-கொள்-வார்.
கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா
அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம்
பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல
பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.
சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.
எல்லா சொத்துக்களும் மக்களுக்கே
எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த
சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே
பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.
அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?
எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே
திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு
எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய
ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது..
பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப்
பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.
கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள்
எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா
அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.
சாராய, கஞ்சா சாமியார்
மதுரை மாவட்டத்-தில் இருந்து
திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப்
பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.
நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய
மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது
இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள்.
சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக்
கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில்
இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து
என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள்
நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை
அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம்.
பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய
கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.
உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்
அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர்
கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே
வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)
அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள்
வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி
எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி
ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு
கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.
மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர்.
சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு
பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன்
50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு
வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.
இவர் கண்ட இடத்-தில் சுற்றித்
திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே
விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி
உட்கார வைத்தார்கள்.
கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து
உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை.
கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய்
ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான
சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.
நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான்
என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர்
பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய
ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.
நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.
ரமண ரிஷி சொத்து உறவினருக்கு
ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம்
வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை
வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி.
உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள்
உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று
கேட்டார்கள்.
நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே
பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம்
கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.
ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி
கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை
நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.
ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில்
பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934,
1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.
இந்த செய்திகள் ஆங்கிலத்திலும்,
தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான்
எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும்
முடியவில்லை.
நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும்
அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான்
ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.
வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார்.
வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு
மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும்.
ஒன்றுமில்லை.
காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம்
போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த
நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன்
பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.
வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த
பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர்.
இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர்
நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது
ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று
சொன்னார்.
ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும்
யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த
நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார்.
காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு
வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய்
விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு
இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.
ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.
இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள்
இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட
பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு
பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக
மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.
கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்
மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன
ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.
இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும்
கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே
மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம்
மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.
இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார்
மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை
வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை
பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.
அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா
போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து
சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே
மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல.
ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ
வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார்
மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.