The following message has appeared in the Viduthalai of 31/08/2008 :- சென்னை, ஆக. 31- திருப்பதி கோவிலில் கோடிக்கணக்கில் தங்க
http://files.periyar.org.in/viduthalai/20080831/news13.html
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில்
கோடிக்கணக்கில் டாலர் மோசடி
திருட்டுக் குற்றம் செய்த சேஷாத்திரிக்குப் பதவி நீட்டிப்பு
எல்லாம் ஏழுமலையான் செயல்!
கடவுளை நம்பும் பக்தர்களே இனிமேலும் ஏமாறாதீர்!
சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

டாலர் மோசடியை திருப்பதி கோவில் பொக்கிஷப் பாதுகாப்பு அதிகாரியாக
இருக்கின்ற டாக்டர் சேஷாஸ்த்திரி செய்துள்ளார். அவருக்கு பதவி
நீட்டிப்பும் தரப்பட்டுள்ளது. ஏழுமலையானை நம்பும் பக்தர்களே பக்தி என்ற
பெயரில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர்
தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.
14-8-2008 அன்று சென்னை - தேனாம்பேட்டையில் நடைபெற்ற சென்னை மாநாடு
விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.
வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இப்பொழுது மேயருக்கு என்ன பிரச்சினை?
இப்பொழுது மேயருக்கு என்ன பிரச்சினை? மேயர் சாலையை அகலப்படுத்திக் கொண்டு
செல்வார். அந்த இடத்தில் திடீரென்று கல்லை நட்டுவிட்டான் என்றால் அதை
சுலபமாகத் தூக்கி போட்டுவிட முடியாது . வீட்டை கூட இடித்துவிடுவார்கள்,
அத்துமீறி யாராவது கட்டடம் கட்டினால் இடித்துவிடுவார்கள்.
செங்கல் வண்டியிலிருந்து ஒரு செங்கல் விழுந்தால் போதும்
ஒரு செங்கல் வண்டி வந்துகொண்டிருக்கும் . வண்டியிலிருந்து ஒரு செங்கல்
விழுந்தால் பின்னாலே வருகின்றவன் அந்தச் செங்கலை நிமிர்த்தி, அதன் தலையிலே
கொஞ்சம் குங்குமத்தை வைத்து, மஞ்சளைத் தடவிவிட்டுப் போட்டான் என்றால்,
பின்னாலே வருகிறவன் அதைப் பார்த்து இரண்டு பஸ்கி போடுவான். இரண்டு பேர்
பஸ்கி போட்டவுடனே, இருபது பேர் பஸ்கி போடுவார்கள். அதுவும் நமது
சென்னையைப்பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இந்த சிங்காரச் சென்னைக்கு
ஒரு சிறப்பு உண்டு.
கூவம் பாலத்தை எட்டிப் பார்த்தாலே போதும்
கூவம் பாலம் இருக்கும். எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். பெரிய
கூட்டமாக இருக்கும். போக்குவரத்து நெரிசலாக இருக்கும். என்ன அங்கே
பார்க்கிறார்கள் என்று வழியில் போகிறவர் அவரும் சேர்ந்து நின்று எட்டிப்
பார்ப்பார்.
ஸ்கூட்டரில் போகிறவன், காரில் போகிறவன், மோட்டார் சைக்கிளில் போகிறவன்
எல்லாம் பார்ப்பான். அவனும் வண்டியைவிட்டு இறங்கி என்னங்க, என்னங்க என்று
சொல்லி பார்ப்பான்.
ஒன்றும் தெரியாமலே கூட்டம் கூடும்!
என்ன பார்க்கிறார்கள் என்று கேட்டால், அதுதாங்க தெரியவில்லைங்க, எல்லோரும்
பார்த்துக் கொண்டிருக்கிறார் கள். நானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
என்று சொல்வான் (சிரிப்பு). ஒன்றும் தெரியாமல் எப்படிக் கூட்டம்
சேர்ந்திருக் கிறதோ அதுமாதிரி நடுவில் இரண்டு கல்லைப் போட்டவுடனே பின்னாலே
ஒரு தகட்டை அடித்து உள்ளே வைத்து விட்டால், உடனே அங்கே ஒருவன் வருவான்,
இன்னொருவன் வருவான், அதையும் ஒரு சிறிய கோவிலாக ஆக்கிவிடுவான்.
முதல்வர் கலைஞரால் பாலம் வந்தது
நல்லவேளையாக நமது தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தால்
தியாகராயர் நகரில் பாலம் வந்தது. இல்லையென்றால் தியாகராயர் நகர் பேருந்து
நிலையத்திற்கு பக்கத்தில் பெரிய கோவில் வந்திருக்கும் (கைதட்டல்).
35 வருடங்களுக்கு முன்னால் இதே தியாகராயர் நகரில் திடீர்ப் பிள்ளையார்
தோன்றியது. 1972-ல் பெரியார் அவர்கள் இருந்தபொழுது கலைஞர் அவர்கள்
முதலமைச்சராக இருந்தபொழுது, திடீரென்று ராத்திரியோடு, ராத்திரியாக
பிள்ளையார் வந்தது
திடீர்ப் பிள்ளையார் பெயரால் வசூல்
எப்படி பிள்ளையார் வந்தது என்று கேட்டால், அது சுயம்பு தானே வந்தது என்று
சொல்லிவிட்டான். இப்பொழுது எங்கே பார்த்தாலும் உண்டியல் வைத்து வசூல் பண்ண
ஆரம்பித்து விட்டான். நல்ல வசூல். உடனே கலைஞர் பார்த்தார். இரண்டு நாள்
உண்டியல் காசு சேர்ந்தது. அப்படியே தூக்கி இந்து அறநிலையப் பாதுகாப்புத்
துறையிடம் ஒப்படைத்து விடு என்று கலைஞர் உத்தரவிட்டார். கலைஞர் -
சி.அய்.டி. போலீஸ்மூலம் கண்டுபிடித்தார்
உடனே கலைஞர் அவர்கள் சி.அய்.டி. போலீசைவிட்டு விசாரிக்கச் சொன்னார்.
பெரியார் சொல்லிவிட்டார். இதை எடுக்கவில்லையென்றால் இந்த இடத்தில் நாங்கள்
கூட்டம் போடுவோம் என்று சொல்லிவிட்டார். நாங்கள் ஆட்சியிலிருக்கும் பொழுது
பெரியாருக்கு சிரமம் கொடுப்போமா? பெரியாருடைய வேலையை செய்வதற்குத் தானே
நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டு சி.அய்.டி.
போலீசை வைத்து விசாரிக்கச் சொன்னார். கலைஞர் செல்வராஜ் என்கிற ஒரு
ஹெட்கான்ஸ் டபிள் 80 ரூபாய்க்கு அந்த பிள்ளையார் சிலையை வாங்கி நட்டார்
என்ற தகவலை வெளியே கொண்டு வந்துவிட்டார் கலைஞர். எதற்காக இதை எடுத்து
உங்களுக்குச் சொல்லுகிறோம் என்று சொன்னால், இந்த மாதிரி வந்ததுதான் பல
இடங்களில் திடீர்க் கோயில்கள்.
ஒரு தகவல் மய்யத்தை கோவிலாக்கிவிட்டான்
அப்படிப்பட்ட பிள்ளையாருக்கு சர்வ சக்தி, சர்வ வியாபி, அவனின்றி ஓரணுவும்
அசையாது என்று இவ்வளவையும் சொல்லியிருக்கின்றான். அதுமட்டுமல்ல, நமது
ஊரில் ஒரு நடை முறை உதாரணம் சொன்னார். நந்தனம் தேவர் சிலையிலிருந்து
வெங்கட் நாராயணா சாலையில் நேரடியாகச் சென்றால் பார்க்கலாம்.
திருப்பதி கோவிலுக்கு இங்கிருந்து போகிறவர்கள் பாருங்கள், நம்மாள்.
அவர்களுக்கு என்ன, எங்கு, எப்பொழுது போவது என்பதற்காக ஒரு இன்பர்மேஷன்
சென்டர் வைத்தார்கள்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோவில் இருக்கிறது. திருப்பதியில்
இருக்கின்ற கோவிலுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக இன்ஃபர்மேஷன் ஆபிஸ்
சென்டரை வைத்தான்.
அவ்வளவுதான்யா, ஒரு பதினைந்து, இருபது வருடத்திற்கு முன்னாலே சாதாரணமாக
அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டு சென்றோம். அதற்கப்புறம் என்ன
செய்துவிட்டார்கள் - வருமானத்திற்கு - அந்த இடத்தை திருப்பதி வெங்கடாசலபதி
கோவிலுக்குப் பிராஞ்ச் ஆபிஸ் ஆக்கிவிட்டார்கள். கோவிலுக் குள்ளே ஒரு
பிராஞ்ச் ஆபீஸ்.
பல இடங்களில் பிராஞ்ச் ஆபீஸ் வைக்கிறார்கள் பாருங்கள். சரவண பவன், அந்த
இடத்தில், இந்த இடத்தில் வியாபாரம் மாதிரி வைத்திருக்கின்றார்கள்
பாருங்கள். தீராத வினைகளை யெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்று
சொல்லு கின்றார்கள்.
ஏழுமலையானுக்கு சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க ஆசை
நம்மூரில் இருக்கும் ஏழுமலையானுக்கு சிங்கப்பூரைப் பார்க்க வேண்டுமென்று
ஆசை. அவர் தன்னுடைய துணைவியார் பத்மாவதி தாயாரோடு போய் சிங்கப்பூரில்
திருக்கல்யாணம், லட்டு விற்பனை கூட்டம் நடந்தது. நம்மாள் ஒரு மருத்துவமனை
கட்ட நிதியுதவி கேட்டால் ஒரு ரூபாய் கொடுக்கமாட்டான், ஒரு பள்ளிக்கூடம்
கட்ட வேண்டும் என்று கேட்டால் ஒரு ரூபாய் கொடுக்கமாட்டான். ஆனால், கோயில்
என்றவுடன் பணத்தைக் கட்டு கட்டாகப் போடுகிறான். அங்கே போய் நகைகளைக்
கொட்டுகிறான். மாலைமலர் பத்திரிகையில் வந்த செய்தி
இது எங்களுடைய பத்திரிகையல்ல. இன்றைக்கு வந்திருக் கின்ற மாலை மலர்
பத்திரிகை. நாங்கள் ஏதோ கடவுளுக்கு விரோதமாகப் பேசுகிறோம் என்று
சொல்லுவார்கள். இன்றைக்கு வந்திருக்கின்ற செய்தியைப் பாருங்கள். திருப்பதி
கோவிலில் அய்ந்து வருடங்களாக நடந்த தங்க டாலர் மோசடி.
தேவஸ்தான தலைவர்மீது நடவடிக்கை
தேவஸ்தான தலைவர்மீது நடவடிக்கை என்ற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. ஒரு
அய்யங்கார் பார்ப்பான், நாமம் போட்டிருக்கிற படத்தோடு பத்திரிகையில்
போட்டிருக்கின் றார்கள். இந்த செய்தி வந்திருப்பது விடுதலையில் அல்ல,
முரசொலியில் அல்ல, நாங்கள் போடவில்லை. இது கற்பனை செய்தியும் அல்ல.
திருப்பதியில் நம்முடைய ஏமாளி வீட்டு ஆட்கள் தாலியை முதற்கொண்டு கழற்றிப்
போட்டு விட்டு வருகிறார்கள். என்ன வென்றால் வேண்டுதல் என்கிறான். ஏம்பா
கழற்றிப் போட்டாய் என்று கேட்டால் வேண்டுதல் என்று சொல்லுகின்றார்கள்.
நமது தாலி அங்கே டாலராகி விற்பனை
இந்த வேண்டுதல் மூலம் நம்மாட்கள் தாலியை முதற்கொண்டு திருப்பதி
வெங்கடாசலபதி உண்டியலில் கழற்றிப் போடு கின்றார்கள். அதை அவன் உருக்கி
அந்தத் தங்கத்தை எடுத்து டாலராக்கி விற்கின்றான்.
நம்மாள் வெங்கடாசலபதி டாலர் என்று சொல்லி காசை கொடுத்து வாங்கிக் கொண்டு
வருகின்றான். இதில் இருக்கின்ற செய்தியை மட்டும் நான் படிக்கின்றேன்.
கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர். கடவுளை இவன் ஏன் புண்படுத்துகின்றான்?
இவர்கள் ஏன் கடவுளைப்பற்றிச் சொல்லுகிறார்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.
திருப்பதி கோவிலில் ரூபாய் கோடிக்கணக்கில் தங்க டாலர் மோசடி
திருப்பதி கோவிலில் கோடிக்கணக்கில் தங்க டாலர் மோசடி நடந்திருப்பது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர் களே, ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்
கணக்கில் அல்ல. ரூபாய் கோடிக் கணக்கில் திருப்பதி கோவிலில் மோசடி
நடந்திருக்கிறது.
நம்மாட்களுக்கு கோடிக்கு எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே தெரியாது.
வார்த்தையிலே எழுதிவிட்டு போங்கள். ஏனென்றால் பூஜ்யம் போடுவதில் தகராறு
அடிக்கும். அப்படி கோடிக்கணக்கில் மோசடி. இதில் இருக்கின்ற செய்தியை
மட்டும் படிக்கின்றேன்.
பொக்கிஷ அதிகாரி டாலர் சேஷாத்திரி
இந்தியாவிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில் திருப்பதி ஏழு மலையான்
கோவில். இந்த கோவில் பொக்கிஷப் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் டாலர்
சேஷாத்திரி (நல்ல பெயர் வைத்திருக்கிறார் இந்த அய்யங்கார்).
டாலர் சேஷாத்திரி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவர். தலைக்கோவில்
அதிகாரி என அதிகாரத்தில் யார் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக இவர்
வைத்ததுதான் சட்டம்.
ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர்கள்
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலில் குவியும் தங்க நகைகளை
உருக்கி (தங்க நகைகளைக் கொண்டு போகும் பக்தர்களே! உங்களுடைய
மூடநம்பிக்கையின் விளைவைப் பாருங்கள். பக்தி என்ற பெயரால் உங்களுடைய நகை
ஒரு பாட்டாளிக்குப் பயன்படவில்லை. வேண்டுதல் என்ற மூடநம்பிக்கையின்
அறியாமையினாலே கோவிலில் கொண்டு வந்து போடுகின்றான்). 2,8,5,10 கிராமில்
ஏழுமலையான் தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன..
வெங்கடாசலபதி சஸ்பெண்ட்
கடந்த 2006-ஆம் ஆண்டு சுமார் 5 கிராம் எடைகொண்ட 300 தங்க டாலர்களை உரிய
ரசீது இல்லாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைப் பிரிவில்
பணிபுரிந்த வெங்டாசலபதி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (வெங்கடாசலபதி
பெயரையே வைத்திருக்கிறார். கடவுளுடைய சக்தியை நம்பக் கூடிய பக்தர்கள்
நினைத்துப் பார்க்கவேண்டும்) இந்த மோசடி குறித்து விசாரிக்க தேவஸ்தானம்
சீனியர் விஜிலன்ஸ் அதிகாரி ரமணகுமாருக்கு உத்தரவிடப் பட்டது. இதையடுத்து
அதிகாரி நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த
2001-லிருந்து 2006 வரை இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
அனைவரும் கூட்டுச் சேர்ந்து மோசடி
இதில் ஆலயப் பொக்கிஷ அதிகாரியான சேஷாத்திரி 2 நாட்களுக்கு விற்பனைக்குத்
தேவைப்படும் டாலர்களை மட்டுமே விற்பனை பிரிவுக்கு வழங்கவேண்டும்.
ஆனால் விதிகளை மீறி இரண்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான டாலர்களை
வழங்கியிருக்கின்றார். இதில் அனை வரும் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது
கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதற்கிடையில் சேஷாத்திரி கடந்த 2006 ஜூன்
மாதம் மோசடிபற்றிய புகார் வந்ததும் தான் ஓய்வுபெறும் ஆகஸ்ட் மாதம் வரையில்
இதனை மூடி மறைத்தார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பணி நீட்டிப்பு
மேலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பணி நீட்டிப்பும் பெற்றுக் கொண்டார்
(அதுவும் வெங்கடாஜலபதி தயவுதான். இந்த வேலை தொடர்ந்து நடக்க வேண்டும்
பாருங்கள் - அதற்காக எக்ஸ்டன்சன் இவருக்கு) எனவே அதை ரத்து செய்து
அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ரமண குமார்
தேவஸ்தானத்திற்குப் பரிந்துரை செய்துள்ளார்.
ஆந்திர அரசு தலையீடு
இதுகுறித்து தேவஸ்தான நிருவாகிகள் கூறும்பொழுது, திருப்பதி கோயிலில்
ரூபாய் கோடிக் கணக்கிலே தங்க டாலர் மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக
ஆந்திர அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பெரிய மோசடி
மறைக்கப்பட்டுவிடும் என்றனர்.
இந்த மாதிரி செய்திகள் தினம் வருகிறது. பொதுமக்கள் இவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
தொடரும்
Friends' Update
-
Loading ...Please wait..
0 Responses
Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.