Skip to content


Efficiency of AIIMS, New Delhi


Following is a Letter to the editor that has appeared in the ‘ Viduthalai’ of date - 24/09/2008:-
http://files.periyar.org.in/viduthalai/20080923/news07.html
ஆசிரியருக்கு கடிதங்கள்

AIIMS-இன் நிர்வாகத் திறமை பாரீர்

அய்யா, மருத்துவ மேல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு
நடத்துவது (AIPGMEE மற்றும் AIIMS) AIIMS, அதற்கான விண்ணப்படிவம்
15.9.2008 முதல் சென்னை பல்கலைக் கழகம் State Bank of India-விலும்
மற்றும் State Bank of India main Branch-யிலும் கிடைக்கும் என்று
விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 30,000-க்கு மேல் AIIMSக்கும் ஒரு லட்சம் வரை
All India Exam-க்கும் மாணவர்கள் எழுதக்கூடிய நிலையில் விண்ணப்பப் படிவம்
சென்னையில் குறிப்பிட்ட நாளிலிருந்து கிடைக்கப்பெறவில்லை. மேலும்
சென்னையிலிருந்து விண்ணப் பிப்போர் குறைந்தது 3000 பேர் இருக்கும்
நிலையில், காலம் கடந்தும் ஒரு நாளில் 100 விண்ணப்பங்கள் 200 விண்ணப்பங்கள்
என்று கொடுக்க முனைகிறார்கள்.

மருத்துவப் பட்ட படிப்பு முடித்து ஒரு வருட காலம் மேற்
படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்காக படித்துவரும் மாணவர்கள், ஒரு வார காலம்
விண்ணப்பம் பெறுவதற்கே அலையவேண்டி உள்ளது.

காலம் காலமாக நடத்திவரும் நுழைவு தேர்வுக்கு விண் ணப்பம் கிடைக்கச் செய்ய முடியாமல் போவது எந்த வகையில் நியாயம்? இது என்ன நிர்வாகம்?

- வேல். கோ. நெடுமாறன்

சென்னை 10


Posted in Blogs.



0 Responses

Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.