நம்மால் முடியும்
நம்பிக்கை
உலகின் இயக்கம்,
பிறப்பவன் இறப்போம் என்று
உண்ணாமல் இல்லை…
எதுவும் செய்யாமல்
இல்லை…
முயன்றால்
இங்கே முடியாததில்லை…
எடுத்தவுடன்
எந்த காரியமானாலும்
தட்டில் வைத்து
தந்து விடுவத்ல்லை…
பறப்பதை பார்த்து
பறக்க நினைத்தவன்
இறக்கைக் கட்டி,
விழுந்து எழுந்து
ஒருநாள்
விமானம் கண்டான்
நம்பினால்…
தடைக்கற்கல்ளெ
படிக்கட்டாய் மாறி
பாதை வகுத்து
வழி காட்டும்…!
நம்புங்கள்!
நம்மால் முடியும்.