Skip to content


One Minute story - Credit Card

கிரெடிட் கார்டு

னந்தராமனுக்காக
அவன் ஆபிஸ் வாசலில் காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து அவன் வந்தான்.
“டேய்.. எப்படிடா இருக்கே?”, அவன் தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டே
வந்தான். சிறு வயதிலிருந்து நாங்கள் பால்ய சினேகிதர்கள்.


“நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேன்.  Wife  சீக்கிரம் வரச்சொன்னா. வெளில போகிறோம். என்ன விஷயம் சொல்லு”, அவசர அவசரமாக கேட்டான்.

“ஒண்ணுமில்லடா. இந்த மாசம் கொஞ்சம் பணக்கஷ்டம்டா..அதான் உங்கிட்டே கொஞ்சம் ஐயாயிரம் ரூபா ….” என்று இழுத்தேன்.

“அடடா..சாரிடா..இப்போ
என்கிட்ட அவ்வளவு பணமில்லட..மாமனார் மெடிக்கல் செலவு ஜாஸ்தியாயிட்டதனால
நானே சிரமப்பட்டுகிட்டு இருக்கேன்டா, என்னை மன்னிச்சுக்கடா”


“பரவாயில்லடா..நோ
ப்ராப்ளம்”, சொல்லிவிட்டு எதிரில் உள்ள வங்கி ATM கௌண்டரை நோக்கி
நடந்தேன். கையில் இன்னொரு நண்பன் கடனாய் கொடுத்த அவனது கிரெடிட் கார்டு
இருந்தது, வட்டியோடு திரும்பக் கேட்டிருந்தான்.


கிரெடிட் கார்டை செருகி ரூபாய் ஐயாயிரம் என்று அழுத்தினேன்.

ஐயாயிரம் ரூபாய் வந்து விழுந்தது

அதே
வங்கியின் பின்புறத்திலிருந்து அனந்தராமன் தன்னுடைய சேமிப்புக்கணக்கில்
கட்டிய அதே ஐயாயிரம் ரூபாய் என்று இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை
!




Posted in My Stories.



5 Responses

Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.

  1. tamilini A says

    nalla irukku

  2. meena sundar says

    nice one !

  3. RINJU says

    UNGALUKU MY 5000 PAARAATUGAL

  4. praveen - manohar says

    super Mr.Vaidhya

  5. jack jai says

    very nice !!