Skip to content


One Minute Story - SMART


ஸ்மார்ட் !

ன்றும்சீனி ஆபிஸில் நுழைந்ததும் எல்லோரும் வழக்கம்போல் அவனைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர்.  எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே அவனும் வழக்கம்போல்
சிரித்துக்கொண்டே அவன் இருக்கையை நோக்கி நடந்தான்.


“எப்ப பார்த்தாலும் போனிலேயே பேசிட்டுருப்பான், இவனுக்கு இவ்வளவு மதிப்பா ?”

“அப்படி என்னதான் போன்ல பேசுவானோ, இவனைப் போய் மேனஜராக்கியிருக்காங்க”

“நம்மெல்லாம் எவ்வளவு சிரம்ப்பட்டு என்னென்ன செய்யலை. இவன் ஒருநாள் கூட அதிகவேலை செய்ததில்லையே”

மதியம்
ஓய்வுநேரம் வரும்வரையில் எல்லாருடைய கவனமும் அவன் மேலேயே இருந்தது.
இவ்வளவு சொல்லியும் அவன் இன்றும் அதேபோல போனிலேயே பேசிக்கொண்டிருந்தான்.


சரியாக
மணி ஒன்று அடித்தது. அனைவரும் சாப்பட்டு அறைக்குள் நுழைந்தார்கள்.
ஜெய்க்கு மட்டும் பொறுக்கவேயில்லை.  நேரடியாக அவனிடம் கேட்டே விட்டான்.


சிரித்துக்கொண்டே சீனி பதில் சொல்ல ஆரம்பித்தான்.

“என்னோட
datas எல்லாம் என்னோட வீட்டுக் கம்ப்யூட்டர்லயும் இருக்கு. தினமும்
வீட்டுக்கு போய் என் லேப்டாப்-ல் உள்ளதெல்லாம் என் வீட்டு கம்ப்யூட்டர்ல
சிங்க்ரொனைஸ் பண்ணி வச்சுடுவேன் என்  wife MCA படிச்சிருக்கா. நான் இங்கே
ஆபீஸ்ல என்னோட வேலைகளை பார்த்திகிட்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம்
கஷ்டமா இருந்தா என் wife அங்கே வீட்டிலிருந்து எனக்கு உதவி செய்வாங்க.
 என்னோட job & reporting, especially forecastஆ இருக்கிறதனால என்னால
பழைய Data-வெல்லாம் வைச்சுகிட்டு at one time ஒர்க் பண்றது ரொம்ப கஷ்டம்.
அதனால நானும் என் மனைவியும் போட்ட திட்டம் தான் இது.  என் மனைவியும்
கம்ப்யூட்டர்ல ரொம்ப திறமைசாலியா இருக்கிறதனால என் வேலை சுலபமா போயுடுது.
சொல்லப் போனா, நாங்க இரண்டு பேருமே இந்தக் கம்பெனிக்காக வேலை செய்யறோம்.
ஆனா, அவளோட ஆபிஸ் விஷயமாத்தான் அடிக்கடி போன்ல பேசவேண்டியதாயிருக்கு.
 அதனாலத்தான் நான் போன்ல எப்போதும் பேசிக்கிட்டே இருக்கேன்”


சொல்லச்சொல்ல எல்லாருக்கும் அதிசயமாயிருந்தது.


Posted in My Stories.



One Response

Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.

  1. meena sundar says

    hmm…. yup smart :)