நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவது தானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல்
அழுகிற போது ஆறுதல் தானே காதல்
ஹே…காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா…..
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும்போது மடியாக வேண்டுமே
தட்டுத்தடுமாறி சோர்ந்து விடும்போது பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை தாவுவதா நல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் …ஹே….
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா…..
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
கங்கை நதியென்ன காவேரியென்ன எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அது கூடப் பெண்மையே
நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும்
பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும்…ஹே….
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா…..
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
படம் : அரிச்சந்திரா
பாடியவர் : எஸ்.பி.பி.
பாடலாசிரியர் : ரவிசங்கர்
இசை : ஆகாஷ்
யார் வந்து படுவது.
hi,vaidhya……….i can,t see any matter ,pl.reload……………..vilas