Skip to content


ENNAMMA KANNU ?

என்னம்மா கண்ணு சௌக்கியமா ?
(நாங்க நல்லாத்தான் இருக்கோம்..நீங்க எப்படி ?)
ஆமம்மா கண்ணு சௌக்கியம்தான்..
(சூப்பரா இருக்கோம்)
யானைக்கு சின்னப்பூனை போட்டியா?
(யானை இல்ல..நான் குதிரை…ச்சும்மா டக்குன்னு எழுந்திருப்பேன்)
துணிஞ்சு மோதித்தான் பட்ட பாடு பாத்தியா?
(இனிமே தலையே தூக்க முடியாதுல்ல….)
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம் தான்
(அசிங்கப்பட்டுட்டியேடா…)
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம் தான்
(உரசிப்பாத்ததுல தெரிஞ்சுருக்குமே)

வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டி கிடக்கு..வெட்டிப்பய உன்னிடத்தில் என்ன இருக்கு
(படத்தில கேட்டுட்டே…அத்தோட நிறுத்திக்கோ..)
சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு
(படத்திலயும் கேட்டோம்…நேருலயும் கேட்டோ
ம்…)
சத்தியத்தை நம்பி ஒஹோஹோஹோ…லாபம் இல்லை தம்பி…ஒஹோஹோஹோ..
(உன் பேருல உள்ள “சத்ய” த்தை எடுத்துட்டு ராஜ்னு மட்டும் வச்சுக்கோ..)
நிச்சயமா நீதி ஹாஹாஹாஹா வெல்லும் ஒரு தேதி..ஹாஹாஹாஹா
(இதுதான் தலைவா நெத்தியடி…)
உன்னாலதான் ஆகாது…ஏ…வேகாது
(நாக்கை புடுங்கிக்கிட்டு சாக ரெடியா)
கொஞ்சம் தானே வெந்துருக்கு..மிச்சம் வேகட்டும்..ஹா..
(தலைவர் பேரைச்சொல்லி..இப்போ எல்லாருக்கும் உன்னை தெரிஞ்சுருக்கும், எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க…?)

எப்பவும் நான் வச்சக்குறி தப்பியதில்லை
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதுமில்ல….
(இனிமேத்தான் எல்லாரும் வடநாட்டு கோயிலுக்கெல்லாம் போவாங்கடோய்…)
இன்னொருவன் என்னை வந்து தொட்டதுமில்லே
தொட்டவனைத் தப்பிக்க நான் விட்டதுமில்லே 
(விடவேக்கூடாது தலைவா…)
மீசையிலே மண்ணு.. ஹொ ஹொ ஹோய்.. ஒட்டுனதை எண்ணு அஹ ஹா ஹா..
(உன் தலையில மண்ணு விழப்போகுது..பாத்துகிட்டே இரு..)
பாயும்புலி நான் தான்..ஹாஹா..ஹா..ஹா….பாக்கப்போறே நீதான்..
(புலி…புலி….தெரியுமில்ல..அது…)
சும்மாவும்தான் பூச்சாண்டி ஏ…காட்டாதே…
(காட்டினது நீதான் சாமியோவ்..)
நம்ம கிட்ட போடுறியே தப்புத்தாளம்தான்…ஹா..
(அவங்க CHARACTER யேத்தான் புரிஞ்சுக்கமுடியாதே தலைவா…)

என்னம்மா கண்ணு..சௌக்கியமா?
(இந்த ஒரு DIALOGUE ஐ வச்சு எத்தனை படத்திலே நீ கைதட்டல் வாங்கியிருக்கே )
ஆமம்மா கண்ணு… FANTASTIC…AS EVER !



Posted in Tamil Songs.

2 comments



pudhukkavidhaigal Indru

கடவுள் எங்கும் இருக்கிறான் !
நாம்தான் பார்ப்பதில்லை !
நீயோ எங்கும் தெரிவதில்லை !!
ஆனால் என் கண்களிலேயே
இருக்கிறாயே, எப்படி ?!?!?!

**************************************************

போரிடும் பழக்கம் உன்னில் இருப்பது
எனக்கு இப்போது தான் தெரியும் !
உன் வில்போன்ற கண்ணசைவில் என்
உயிர்போனது எனக்குத்தான் தெரியும் !!

Posted in Pudhukkavidhaigal.

1 comment



Demand song from ninaivellam nithya

For all of you, here is the another song everybody liked here:

இசை : டாக்டர் இசைஞானி இளையராஜா

பாடியவர் : எஸ். பி. பாலா

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்..ஆஹா..

என் வாசல் வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் அரங்கேறும் கண்ணோரம்..

(நீதானே)

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவ குயில்கள்
உன் ஆடை ஏ…மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஏ…குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடும் என தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம்..எந்நாளும்

(நீதானே)

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஏ..இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஏ.. உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முகவேர்வைத்துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகை வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும்.. எந்நாளும்

(நீதானே)
Watch here :
http://www.youtube.com/watch?v=O5oM9gydX2Q


Posted in Tamil Songs.

4 comments



Lovely song !!



Another lovely song..


படம் : புவனா ஒரு கேள்விகுறி

இசை : டாக்டர் இசைஞானி இளையராஜா

பாடியவர் : எஸ். பி. பாலா

பாடல் :


விழியிலே மலர்ந்தது, உயிரிலே கலந்ததது

பெண்ணெனும் பொன்னழகே அடாடா எங்கொங்கும் உன்னழகே

அடாடா எங்கொங்கும் உன்னழகே


உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்

புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே..


(விழியிலே…)


ஒவியனும் வரைந்ததில்லையே உன்னைபோல்

ஓரழகைக் கண்டத்தில்லையே

காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி

கண்களுக்கு விளையந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே…)
கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகைமுன்னழகில் காமினி பின்னழகில் மோகினி

மோகவலை சூடும் நேரமே யோகம் வர பாடும் ராகமே..


(விழியிலே…)
Youtube Watch : (Don”t miss to see thalaivar style while listening)
http://www.youtube.com/watch?v=JjG_ea00_0I


Posted in Tamil Songs.

1 comment



Song lines from Ninaivellam Nithya

This is an amazing evergreen song from Ninaivellam Nithya.  Lines belong to Kaviperarasu Vairamuthu, music by Illayaraja.

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
(பனி விழும்)
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனி விழும்)
சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர்மாலை
(சேலை)

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

(பனி விழும்………..)

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
(காமன்)
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

(பனி விழும்………)

மீண்டும் சந்திப்போம் ஒரு நல்ல பாடலோடு….பாபு


Posted in Tamil Songs.

4 comments



Pudhukavidhaigal Indru

மண்



மண்ணுக்கு வாசனை உண்டு !

மண்ணுக்கு உயிரும் உண்டு !

மண்ணுக்கு பாசமும் உண்டு !

ஊர் எல்லையை கடந்தபோது

உள்ளம் துடித்தது !

மண்மீது தாய் போல் பாசம் !

ஒன்று மட்டும் தெளிவாய்

தெரிந்துகொண்டேன் !

பிறக்கும்போது அழுதேன் !

இறக்கும்போது அழமாட்டேன் !

உயிருக்கு உயிர் கொடுப்பதில்

மகிழ்ச்சி அடைவேன் !!




*********************************************


Posted in Pudhukkavidhaigal.

3 comments



Hi Koos Today !!

கண்ணிமைக்கும் நேரத்தில்
கண் இமைக்குள் விழுந்தேன்
கண் இமைக்காமல் நின்றேன் !!

******** ********* ******** ********* ******

உன் கண்கள் கருப்பு வெள்ளை !
என் கனவுகள் கலர்கலராய் !!
கண்ணே, உன்னால் தானே ?!

******** ********* ******** ********* ********


Posted in Hi Koo.

4 comments



Pudhukavidhaigal (Title Kavidhai) !!!

மார்கழி மாதம், கோலங்கள், அவள்……….

அதிகாலைப் ப்ரார்த்தனை !
அவள் போட்ட கோலங்கள்
அழியவே கூடாதென்று !!

****** ****** ****** ******  *******

பகுவடிவத்தில் புதியதொரு
கண்டுபிடிப்பு !
நூறுபுள்ளிகளில் அவள் போட்ட கோலம் !!

****** ****** ****** ******  ******* ******* ********

அவளால் இன்று நான்
நூலகத்தில் கோலப்புத்தகங்கள்
தேடுகின்றேன்  !!

****** ****** ****** ******  *******


Posted in Pudhukkavidhaigal.

5 comments



Pudhukavidhai Indru…

யதார்த்தமான ஆசை !



கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது

கொஞ்சம் உயிர் விட ஆசை !

குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது

அழுகையையே மறந்துவிட ஆசை !



உள்ளங்கையில் உன் பெயரை எழுதி

முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து

உலராமல் இருக்க ஆசை !



உன்னோடு இருக்கும் ஒருநாள்

ஒரு யுகமாய் மாற ஆசை !

எனைப்பார்க்கும் போது உன் கண்கள்

இமைக்காமல் இருக்க ஆசை !



கோபமாய் நீயிருக்கும் நாளை

காலண்டரில் குறித்துவைக்க ஆசை !

நீயில்லாத ஒரு நொடியை

நினைத்துப் பார்க்கக்கூட இல்லை ஆசை !



என் ஆசைகளை நிறைவேற்றுவது

உன் கடமை !

ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்

உன்னிடம் என்பது தானே உண்மை !!




*********************************************


Posted in Pudhukkavidhaigal.

4 comments



Love Poems today !

கவிதைக்கு நேரமில்லை !

இப்பொழுதெல்லாம் கவிதை
எழுத முடிவதில்லை !
உன்னைப் பற்றி நினைக்கவே எனக்கு
நேரம் போதவில்லை !!

கவிதை அழகில்லை !

அவள் புன்னகை !
அறுபது பவுன் நகை !
ம்ஹூம்..நிஜமாய் ஈடில்லை !!

அவள் இதழ்கள் !
பிற இதழ்கள் !
ம்ஹூம்..படிக்கவே பிடிக்கவில்லை !!

அவள் நடை !
அன்ன நடை !
ம்ஹூம்..அன்னம் அழகில்லை !

அவள் கண்கள் !
என் கவிதை !
ம்ஹூம்..கவிதை அழகில்லை !!



Posted in Love Poems.

5 comments