1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
நிறைந்துவழியுமளவு பெருஞ்செல்வம் வைத்திருந்து அதை பயன்படுத்தாதவன் இறந்தவனைப்போன்றவன் அப்பொருளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை
——————————————————————————————————
தெளிப்பொருள் விளக்கம்
நன்றியில் செல்வம் - பயனில்லாத செல்வம்
வாய் சான்ற - நிறைந்துவழியுமளவு
பெரும்பொருள் - பெருமளவு செல்வம்
வைத்தான் - வைத்திருப்பவன்
அஃது + உண்ணான் - அதை பயன்படுத்தாதவன்
செத்தான் - இறந்தவனைப்போன்றவன்
செய + கிடந்தது + இல் - அப்பொருளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை
——————————————————————————————————
சால - நிறைந்த - சான்ற
வாய் - நுழைவாய் பணப்பெட்டியின் வாய்
வாய் சான்ற - நிறைந்துவழியுமளவு
—————————————————————————————————
உண்ணுதல் - அனுபவித்தல்
அனுபவம் என்ற வடமொழிசான்ற சொல்லுக்கு நான் நீண்டநாள்தேடிய தமிழ்ச்சொல்லுக்கு திருவள்ளுவர் ஒருவகை பதிலளித்துள்ளார்
Posted in Uncategorized.
Tagged with 1001, நன்றியிற்செல்வம், பொருட்பால், ஒழிபியல்.
By Sivakumar
– April 26, 2010
770 நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை
தலைமக்க ளில்வழி யில்
நிலையான வீரர்கள் நிறையயிருக்கிறார்கள் என்றபோதிலும் படைக்கு தலையில்லையென்றால் செல்லும்வழி நோக்கு சரியிருக்காது
————————————————————————————————
தெளிப்பொருள் விளக்கம்
நிலைமக்கள் - நிலையானமக்கள் பின்வாங்காதவீரர்கள் சால - நிறைய மிகவும்
உடைத்து + எனினும் - இருக்கிறார்கள் என்றபோதிலும்
தானை - படை
தலைமக்கள் + இல் - தலைவர் தலைவி இல்லையென்றால்
வழி + இல் - நோக்கம் செல்லும் வழி
Posted in Uncategorized.
Tagged with 770, படைமாட்சி, பொருட்பால், அங்கவியல்.
By Sivakumar
– April 26, 2010
359 சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
எதை பற்றிக்கொள்ளவேண்டும் என்ற மெய்யுணர்ந்து தேவையற்ற பற்றுகளை அகற்றி நாம் நடந்தால் அந்தப்பற்றினால் வருந்துன்பம் நன்மைகளையழித்து நம்முடன் வராது
———————————————————————————————
தெளிபொருள் விளக்கம்
சார்பு - சார்ந்திருப்பது பற்றுவைத்திருப்பது நம்மை ஈர்துவைத்திருப்பது
சார்புணர்ந்து - எதைப்பற்றிக்கொள்ளவேண்டும் என்ற மெய்யுணர்ந்து
சார்பு கெட – தேவையற்ற பற்றுகளையகற்றி
ஒழுகின் - நாம் நடந்தால்
சார்தரும் + நோய் - அந்தப்பற்றினால் வருந்துன்பம்
மற்றழித்து - நன்மையீட்டும் மற்றவைகளையழித்து
சார்தரா – நம்முடன் வராது சேர்ந்துவராது
———————————————————————————————-
சார்தரா - will not give company to us (the troubles)
Posted in Uncategorized.
Tagged with 359, துறவறவியல், மெய்யுணர்தல், அறத்துப்பால்.
By Sivakumar
– April 26, 2010
521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள
ஒருவர் செல்வத்தையிழந்துநிற்கும் காலத்திலும் அவரிடம் வைத்திருந்த பழையநட்பை கொண்டிருத்தல் சுற்றத்தாரிடமே உள்ளது
————————————————————————————————-
தெளிப்பொருள் விளக்கம்
பற்று + அற்ற+ கண்ணும் - செல்வத்தையிழந்துநிற்குங்காலத்திலும்
பழைமை - அவரிடம் வைத்திருந்த பழையநட்பை
பாராட்டுதல் - (பழையநட்பை) கொண்டிருத்தல்
சுற்றத்தார் கண்ணே - சுற்றத்தாரிடமே
உள - உள்ளது
பற்று என்பது ஒருவன் பற்றுவைதிருக்கும் செல்வதைக்குறிப்பது
————————————————————————————————-
அற்ற+ கண் - கணம் கண் இவை காலத்தைக்குறிக்குஞ்சொற்கள் காலம் என்பது கால் என்ற வடமொழியைச்சார்த்த சொல்லாகயிருக்கலாம்
————————————————————————————————-
திருக்குறளில் அதிகார எண் 81 - பழமை. இது பழையபோருட்களைக்குறிப்பதில்லை பழைய நட்பினைக்குறிப்பதே
————————————————————————————————-
Posted in Uncategorized.
Tagged with 521, சுற்றந்தழால், பொருட்பால், அரசியல்.
By Sivakumar
– April 26, 2010
355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடாமல் அதுபற்றியயுண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.
———————————————————————————————
தெளிபொருள் விளக்கம்
எத்தன்மைத்து + ஆயினும் - எந்த தன்மையையுடையதாகவிருந்தாலும்
Posted in Uncategorized.
Tagged with 355, துறவறவியல், மெய்யுணர்தல், அறத்துப்பால்.
By Sivakumar
– April 26, 2010
426 எவ்வ துறைவ துலக உலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
உலகம் எவ்வாறு நடக்கிறதோ அவ்வாறு உலகத்தோடு நடப்பதே அறிவுடைமையெனப்படும்
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
எவ்வது - எவ்வாறு
உறைவது உலகம் - உலகம் நடக்கிறதோ
உலகத்தோடு + அவ்வது - அவ்வாறு உலகத்தோடு
உறைவது அறிவு - நடப்பது அறிவு
Posted in Uncategorized.
Tagged with 421~430, Add new tag, பொருட்பால், அரசியல், அறிவுடைமை.
By Sivakumar
– April 22, 2010
1062 இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்
பிறரிடங்கையேந்தி இவ்வுலகில் உயிர்வழவேண்டுமானால் அவ்வாறனவுலகை இயற்றியவன் அலைந்துதிரிந்து கேடுக
———————————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
இரவல் - கையேந்துவது
இரந்தும் - பிறரிடங்கையேந்தி(யும்)
உயிர்வாழ்தல் + வேண்டின் - உயிர்வழவேண்டுமானால்
உலகு + இயற்றியான் - அவ்வாறனவுலகை இயற்றியவன் (படைத்தவன்)
பரந்துகெடுக - அலைந்து திரிந்து கேடுக
———————————————————————————————–
இரவச்சம் - கையேந்தும் நிலையைக்கண்டு அஞ்சுவது
தனிவொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்
Posted in Uncategorized.
Tagged with 1062, பொருட்பால், ஒழிபியல், இரவச்சம்.
By Sivakumar
– April 16, 2010
291 வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
உண்மையெனச்சொல்லப்படுவது என்னவென்றால் எந்தவொரு தீமையையுந்தராதச்சொற்களை சொலுதலேயாகும்
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
வாய்மை + எனப்படுவது - உண்மையெனச்சொல்லப்படுவது
யாதெனின் - என்னவென்றால்
யாதொன்றும் - எந்தவொரு
தீமை + இலாத - தீமையைத்தராத சொற்களை
சொலல் - சொல்லுதல்
Posted in Uncategorized.
Tagged with 291~300, துறவறவியல், வாய்மை, அறத்துப்பால்.
By Sivakumar
– April 14, 2010
891 ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை
ஒருசெயலை செய்துமுடிக்கும் வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல் தம்மைக்காத்திடும் காவல்களனைத்தையும்விட சிறந்தகாவலாக அமையும்
——————————————————————————
தெளிபொருள் விளக்கம்
ஆற்றுவார் - செய்துமுடிக்கும் வல்லவரின்
ஆற்றல் - செயலை வலிமையை
இகழாமை - இகழாதிருந்தால்
போற்றுவார் - காத்துக்கொள்பவர் தனக்குத்தீங்குவராமல்
போற்றலுள் எல்லாம் - அனைத்து காவல்களிலும்
தலை - சிறந்தது
——————————————————————————
894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்
ஆற்றற்படைதவர்க்கு அவ்வாற்றலில்லதார் துன்பவிளைவித்தல் மரணத்தை கைதட்டியழைப்பதைப்போன்றது
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
கூற்றத்தை - மரணத்தை
கையால் - கைதட்டி கைகாட்டி
விளித்தல் +அற்றால் - அழைப்பதைப்போன்றது
ஆற்றுவார்க்கு - ஆற்றற்படைதவர்க்கு
ஆற்றாதார் - அவ்வாற்றலில்லதார்
இன்னாசெயல் - துன்பவிளைவித்தல்
——————————————————————————
தட்டி + அழைப்பது =தட்டியழைப்பது
அடி + ஆள் = அடியாள்
கை + தட்டி = கையைத்தட்டி / கைதட்டி
——————————————————————————
Posted in Uncategorized.
Tagged with 891-900, பொருட்பால், பெரியாரைப்பிழையாமை, அங்கவியல்.
By Sivakumar
– April 13, 2010
331 நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை
நிலையில்லதவற்றை நிலையானவையென்று நினைக்கும் சிற்றறிவுதன்மை கிழ்தன்மையானது
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
நில்லாதவற்றை - நிலையில்லதவற்றை
நிலையின + என்று - நிலையானவையென்று
உணரும் - நினைக்கும்
புல்+ அறிவாண்மை - சிறிய அறிவுத்தன்மை
கடை - கடைசியில் வைக்கப்படும் கிழ்தன்மையானது
——————————————————————————–
Posted in Uncategorized.
Tagged with 331~340, துறவறவியல், நிலையாமை, அறத்துப்பால்.
By Sivakumar
– April 12, 2010