Skip to content

Categories:

691~700 மன்னரைச்சேர்ந்தொழுதல் (பொருட்பால் - அமைச்சியல்)

693  போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
         தேற்றுதல் யார்க்கும் அரிது

நாம் நம்மை காத்திடவேண்டுமேன்றால் அறியபிழைகள் செய்யாமல் காத்திடவேண்டும் பிழைச்செய்தபின் மன்னரைத்தேற்றுதல் எவருக்கும் அரியசெயலாகும்
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்

போற்றின் - போற்றவேண்டுமேன்றால் காத்திடவேண்டினால்
அரியவை போற்றல் - அறியபிழைகள் வராமல் காத்திடவேண்டும்
கடுத்தபின் - மன்னருக்கு சந்தேங்கம் கொண்டபின்
தேற்றுதல் - அவரை தேற்றுதல்
யார்க்கும் அரிது - எவருக்கும் அரியசெயல்
——————————————————————————–
போற்றுதல் - காத்தல் பின்பற்றுதல் வாழ்த்துதல் வழிமொழிதல்
——————————————————————————–

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



201~210 தீவினையச்சம் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

203  அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
        செறுவார்க்குஞ் செய்யா விடல்

நமக்கு தீங்குசெய்பவர்க்குக்கூட தீமைசெய்யாதிருப்பது நாமறிந்த அறிவுகளிளெல்லாம் சிறந்தது எனப்படும்
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்

அறிவினுள் + எல்லாம் - நாமறிந்த அறிவுகளிளெல்லாம்
தலையென்ப                     - சிறந்தது எனப்படுவது
செறுவார்க்கும்                 - நமக்கு தீங்குசெய்பவர்க்கும்
தீய                                       - தீயவை
செய்யா விடல்                - செய்யாதிருப்பது
——————————————————————————–

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



951~960 குடிமை (பொருட்பால் -> ஒழிபியல்)

956  சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
        குலம்பற்றி வாழ்துமென் பார்
குறையற்ற நன்மக்களின் வாழ்கை வாழவேண்டும் என்றெண்ணுபவர் வஞ்சனைக்கொண்டு உயர்ந்ததல்லாத நிலையில்லாதவற்றை செய்யமாட்டார்
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
மாசற்ற - குறையற்ற
குலம்பற்றி - நன்மக்களின் வாழ்கை நங்குடியின் வாழ்கை
வாழ்தும் + என்பார் - வாழவேண்டும் என்றெண்ணுபவர்
சலம்பற்றி - வஞ்சனைக்கொண்டு சினங்கோண்டு
சால்பு + இல - உயர்ந்ததல்லாத நிலையில்லாதவற்றை
செய்யார் - செய்யமாட்டார்
——————————————————————————–

Posted in Uncategorized.

Tagged with , , , .

2 comments



61~70 புதல்வரைப்பெறுதல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

61   பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
       மக்கட்பே றல்ல பிற

நாம்பெறக்கூடியவற்றுள் அறியவேண்டியதையறிந்த அறிவுடையப்பிள்ளைகளை பெறுவதைவிட சிறந்தது நானறிந்ததில்லை
————————————————————————————————–
தெளிபொருள் விளக்கம்

பெறும் + அவற்றுள் - நாம் அடையக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றுள்
அறிவு + அறிந்த - அறியவேண்டியதையறிந்த (அறியவேண்டியதை அறிந்த)
மக்கள் + பேறு - (அறிவுடைய) பிள்ளைகளைப்பெறுவது
அல்ல பிற - அதைவிட பிறவற்றை அதைவிடச்சிறந்தது
யாமறிவதில்லை - நான் அறிந்ததில்லை (நானறிந்ததில்லை)

————————————————————————————————--
திருவள்ளுவர் நான் என்று கூறும் மற்றொரு குறள் - 1071
—————————————————————————-——————-

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



1071~1080 கயமை (பொருட்பால் -> ஒழிபியல்)

1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன
          வொப்பாரி யாங்கண்ட தில்

கீழ் எண்ணங்கொண்டவர் பார்பதற்கு நன்மக்கட்போன்றே தோன்றுவர் அதைப்போன்ற ஒற்றுமையானதை நான் வேறெங்கும் கண்டதில்லை
———————————————————————————————-

தெளிபொருள் விளக்கம்

கயவர் - கீழ் எண்ணங்கொண்டவர்
மக்களே போல்வர் - பார்பதற்கு நன்மக்கட்போன்றே தோன்றுவர்
அவர் அன்ன - அவரைப்போன்ற அதைப்போன்ற
அன்ன - போன்ற
ஒப்பாரி - ஒற்றுமையானதை
யாங்கண்டது இல் - நான் நாம் வேறெங்கும் கண்டதில்லை
———————————————————————————————-
திருவள்ளுவர் நான் என்று கூறுவதை வேறெங்கும் கண்டதில்லை
———————————————————————————————-

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



631~640 இடுக்கண்யழியாமை (பொருட்பால் -> அரசியல்)

632  இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
        கிடும்பை படாஅ தவர்

துன்பத்திற்கு வருந்தாதவர் அந்த துன்பத்திற்கே துன்பமுண்டாக்குவர்
———————————————————————————————–
தெளிபொருள் விளக்கம்
இடும்பைக்கு + இடும்பை - துன்பத்திற்கு துன்பம்
படுப்பர் - கொடுப்பார் உண்டாக்குவர்
இடும்பை படாதவர் - துன்பப்படாதவர் வருந்தாதவர்
———————————————————————————————–
படுப்பர் - அவன் பாடாபடுத்துவான்
துன்பதிற்கே துன்பம் - திருப்பதிக்கே லட்டு
———————————————————————————————–
 

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



931~940 சூது (பொருட்பால் -> அங்கவியல்)

932  ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல்
          நன்றெய்தி வாழ்வதோ ராறு

ஒன்றைக்கொடுத்து நூறையிழக்கவைக்கும் சூதினையாடுவோர்க்கு நன்மைபெற்றுவாழ்வதற்கான வழிவுண்டாகுமோ
———————————————————————————————–

தெளிபொருள் விளக்கம்
ஒன்று + எய்தி - ஒன்றைக்கொடுத்து
நூறிழக்கும் - நூறை இழக்கவைக்கும் (நூறையிழக்கவைக்கும்)
சூதர்க்கும் - சூதாடுவோர்க்கு
உண்டாங்கொல் - உண்டாகுமோ
நன்றெய்தி - நன்மைபெற்று
வாழ்வதோர் ஆறு - வாழ்வதற்கானவழி
ஆறு - வழி
———————————————————————————————–
உண்டாங்கொல்  கொல்- ஒருவகை கேள்வியெழுப்புச்சொல் 
———————————————————————————————–

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



191~200 பயனிலசொல்லாமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

192  பயனில பல்லார்முற் சொல்லல் நயனில
        நட்டார்கட் செய்தலிற் றீது


பயனில்லாதவற்றை பலர்முன்சொல்லுதல் நண்பரிடத்து அவருக்கு சிறப்பில்லாச்செயலை செய்வதைவிட தீயது
———————————————————————————————–
தெளிபொருள் விளக்கம்

பயனில - பயனில்லாதவற்றை
பல்லார்முன் - பலர்முன்
சொல்லல் - சொல்லுதல்
நயன் + இல - சிறப்பில்லா விருப்பமில்லாச்செயல்
நட்டார்கண் - நண்பரிடத்து
செய்தலின் - செய்வதைவிட
தீது - தீயது
———————————————————————————————–

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



631~640 அமைச்சு (பொருட்பால் -> அமைச்சியல்)

632  வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
        டைந்துடன் மாண்ட தமைச்சு

அஞ்சாமை தங்குடிமக்களைக்காத்தல் நூற்களைக்கற்றல் கற்றதைநன்கறிதல் விடாமுயற்சி இவையைந்துடன் கூடியதே அமைச்சு
—————————————————————————————————
தெளிபொருள் விளக்கம்

வன்கண் - அஞ்சாமை
குடிகாத்தல் - தங்குடிமக்களைக்காத்தல்
கற்று + அறிதல் - நூற்களைக்கற்றல் கற்றதைநன்கறிதல்
ஆள்வினையோடு - விடாமுயற்சியோடு
ஐந்துடன் - இவையைந்துடன் (இவை ஐந்துடன்)
மாண்டது அமைச்சு - கூடியது அமைச்சு
—————————————————————————————————
தன் + குடிமக்கள் = தங்குடிமக்கள் தங்கள் = தன் + கள்
—————————————————————————————————

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



981~990 சான்றாண்மை (பொருட்பால் - ஒழிபியல்)


981  கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
          சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

செய்யத்தகுந்தவற்றை அறிந்துச்செயலாற்றி சன்றோராக விளங்கவேண்டுவோர்க்கு நற்குணங்களெல்லாம் அமைந்திருக்கவேண்டும்
——————————————————————————–
தெளிபொருள் விளக்கம்

கடனறிந்து - செய்யத்தகுந்தவற்றை அறிந்து
சான்றாண்மை - சிறந்தோராக
மேற்கொள்பவர்க்கு - விளங்குவோருக்கு
நல்லவை + எல்லாம் - நற்குணங்கள் எல்லாம்
கடன் + என்ப - அமையகடமைப்பற்றிருக்கிறது எனப்படும்
——————————————————————————–

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments