Skip to content


எந்திரன் – Movie Review….


From www.manakkudiyan.com :




எந்திரன் – Movie Review….


 



ஐசக் அசிமோவின் கதைகளில் வரும் பாத்திரம் போன்ற ஒன்றை நம்மூர் சந்துமுனை கூழூத்தும் கோவில் வாசல் பெண்களின் குலவைகளுக்கு மத்தியில் கொண்டுவந்து நிறுத்தும் அமரர் சுஜாதாவின் அசத்தலான திரைக்கதையை, நிஜ ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் சேர்த்து, ரஜினி என்னும் டெர்ரரோடு வந்து மிரட்டி பட்டையை கிளப்பி  இருக்கிறார் ஷங்கர் !  

ஹிந்தி படம் பார்த்துக்கொண்டிருந்த இருந்த ஹிந்திக்காரனை தலையில் தட்டி தமிழ்ப் படம் பார்க்க வைத்தவர் மணிரத்தினம்.  இங்கிலீஷ் படம் பார்த்துக்கொண்டிருந்த இங்கிலீஷ்காரனை தலையில் தட்டி தமிழ் படம் பார்க்க வைக்கிறார் ஷங்கர் !



 ’ இது இயக்குனர் ஷங்கரின் கனவுப் படம்ம்ம்ம் !” என்று இழுத்து இழுத்து   வைரமுத்து சொல்வது உண்மையல்ல. இது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கனவுப் படம்! 


வியக்கவைக்கும் ஷங்கருக்கும், விஷ்வா ரூப ரஜினிக்கும் அடுத்தபடியாய் படம் முழுக்க ஒவ்வொரு frame -இலும் வியாபித்து நிற்கிறார் ‘வசன பாரதி’ என்று ஜா.ரா.சுந்தரேசனால் கொண்டாடப்பட்ட அமரர் சுஜாதா.  மெமரி 1 zetta byte… Neuro system  download… Target demagnetization…”    என்று ‘ என் இனிய இயந்திரா’ போல sci -fi யாய் வேறு தளத்தில் பயணிக்கும் கதையை ” தோடா, நீ ஒன்னியும் பண்ண முடியாது…” என்று லோக்கல் கிரௌண்டுக்கு கூட்டி வந்து கலந்து கட்டி அடிக்கிறார் சுஜாதா.  தொல்காப்பிய வரிகள், வயசு – ஒரு நாள்!, மேற்கு மாம்பலம் போன் நம்பர், நாட்டை குறிச்சி ராகம் நடுவுல இங்க சுதி ஏறிடிச்சி, கடவுள் இன்னா யாரு? சிட்டி பாபு விளக்கம், சிட்டி upgraded version 2 , இதழ்… படுத்திருக்கும் வரிக்குதிரை-  என எந்திரன் முழுவதிலும் வயராய் சாரி உயிராய் இழைந்திருக்கிறார்.  அதுவும் ” வீட்டு அட்ரஸ் இல்ல, I .P அட்ரஸ் இருக்கு!” என்று கூறி ” 103 . .. என்று class -A IP அட்ரஸ் சொல்லி ஜல்லி அடிக்கும் இடத்திலும், மருதுவக்கலூரி மாணவி சனா படிக்கும்போது சிட்டியிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றும் குடல் சுற்றிக் கிடக்கும்  குழந்தையின் பிரசவ நேரங்களில் வெளிப்படும்  technological terminology depth  கண்டு  தானாகவே ” சுஜாதா நிக்கறாரு மச்சி !” என்கிறது வாய். 




ரஜினி… ‘சொன்னதை மட்டுமே செய்யும் சிட்டி’ போல இயக்குனர் சொன்னதை மட்டும் செய்து அடக்கி வாசித்திருக்கிறார்.  இடை வேளைக்கு அப்புறம் வில்லனாய் வந்து தனது ஒரிஜினல் ஸ்டைலில் வாயைக்கோணி ‘ ரே…போ..’, ” மே…” என்று மிரட்டியிருக்கிறார். இரண்டாயிரம் சைடு ஆர்டிஸ்ட்கள் புடை சூழ என்ட்ரி சாங், ‘ சித்தப்பா ஒன்னு தெரியுமா உங்களுக்கு…’ இன்னு சுருட்டை உதடில் பார்க் பண்ணுவது, ‘ மாயாண்டி நான் லேட்டா  வந்தாலும் லேட்டஸ்ட் ” போன்ற பஞ்ச் டயலாக்ஸ், காமெராவை உற்றுப் பார்த்து ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’, ‘ அவன் பயந்து நான் இது வரைக்கும் பாத்ததில்ல’, ‘ நீ தான் பழசெல்லாம் மறக்க மாட்டியே…?’ போன்ற கதாபாத்திரத்தையும் தாண்டி ரஜினியை கண் முன்கொண்டு வந்து நிறுத்தம் சமாச்சாரங்கள் எந்திரனில் இல்லை. ‘சிவாஜி’யை போல ஷங்கர் இயக்கிய ரஜினி படமல்ல இது.  எந்திரன் ரஜினி நடித்த ஷங்கர் படம். கள் இறக்கும் கலாபவன் மணி காதலியின் கையை பிடித்துக்கொண்டு கத்தியை எடுத்து ‘ ஏய் சீவிடுவேன்…’ என்பதும், ரஜினி சண்டையே  போடாமல் தப்பித்து ஓடுவதையும் பார்க்கும்போதே, ரஜினியையும் தாண்டி கதாபாத்திரம் மட்டுமே முன் நிறுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ரஜினி தனது ஸ்டார் இமேஜ் தாண்டி அழகாக வெளியே வந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.  ஆனாலும்… கிடைத்த கேப்பில் வில்லன் ரோலில் வந்து கிடா ( black sheep !)  வெட்டியிருக்கிறார் அசத்தலாய். வில்லன் ரோலில் தனது ஒரிஜினல் பாணியில் ‘ ஏன் உன் ரத்தம் இன்னு சொல்லேன்…. மே…’ என்று அலப்பறை செய்திருக்கிறார். 



வஸ்தாதுகளை ‘ தலைவர்’  பொரட்டி போட்டு ‘ தாய்ப்பால கக்கர வரைக்கும் பறந்து பறந்து அடிப்பேன்’ இன்னு டயலாக் சொல்லி அடிப்பாரு என்று எண்ணி போகும் ரசிகனுக்கு கடைசி 45 நிமிடத்தில்தான் தீனி கிடைக்கிறது. இப்போ எண்ட்ரி இப்போ ரகளை வரும் என கைதட்டி விசிலடிக்க காத்திருந்து படத்தில் மூழ்கி போன ரசிகர்களின் உணர்வு, கடைசி 45 நிமிடத்தில் பீறிக்கொண்டு வருகிறது.  



‘ காதல்ன்னு வந்தா நட்டு கழண்டிடும் இன்னு சொன்னது உண்மை’  என்று சொல்லும் இடத்தில் சிட்டி பாத்திரம் தொடுகிறது. 



ஐஸ்வர்யா ராய் அழகு, அழகு, அட நன்றாகவும் செய்திருக்கிறார்.



நல்லவேளை சுமன் செய்யவில்லை, டேனி செய்த ரோலை.



 கருணாசுக்கும், சந்தானதிருக்கும் வேலை இல்லை, சிட்டியே சிரிக்க வைப்பதால். 



ஆர்ட் டைரக்ஷன், பின்னணி இசை, ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு என எல்லாம் அருமை. 



கிராபிக்ஸ் – ? எது கிராபிக்ஸ், எது ரியல் என கண்டறிய முடியா அற்புதம். அசத்தல். அதகளம் ! 


தி.மு.க. மற்றும் மாறன் சகோதரர்கள் மீதுள்ள கோபத்தில் ‘ எந்திரனை’ புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் எழுதி வரும் தமிழ் மக்கள் சிலர்,  ஒட்டு மொத்த உலகத்தையும் தமிழ் சினிமாவை அண்ணாந்து பார்க்கச் செய்த எந்திரனை ஒரு படமாக மட்டுமாவது கருதி பார்க்க வேண்டும். 
 


மைனஸ் பாயிண்ட்ஸ்:  இடைவேளை வரை தட தட வென்று சூப்பர் பாஸ்டில் போகும் கதை, இடைவேளைக்கு அப்புறம் இழுக்கும் அந்த ரங்குஸ்கி காட்சிகள் போன்ற 10 ௦ நிமிடங்கள். 
 


பிளஸ் பாயிண்ட்ஸ்:


ரஜினி, ரஜினி, ரஜினி


நேர்த்தியான தொழில் நுட்பம்


Sci -fi சமாச்சாரத்தை சாமானியனுக்கும் புரியும் படி சொன்ன விதம் 


நம்பி குழந்தை,குட்டிகளை கூட்டிப்போய் காட்டலாம் போன்ற குதூகலமான படம்


ஹாலிவுட் தொழில் நுட்பம்   ( CNN Headlines “ Enthiran matches Holywoods’s best”)


சுஜாதா வின் வசனங்கள்,
இன்னும் நிறைய .


நிச்சயமாய் பாருங்கள், 
 


மணக்குடியான் வெர்டிக்ட்:  ” எந்திரன்  -  தமிழ் சினிமாவின் உச்சம். மனதையும், அறிவையும் ஒன்றாய் தொட்டவன்”


: Movie review - பரமன் பச்சைமுத்து


: Catagory – Manakkudi Talkies   | Manakkudiyan.com


Back to Main Page–à

Posted in Uncategorized.

Tagged with , , , , , , .

No comments



Movie Review – மதராச பட்டினம்…

From www.manakkudiyan.com :


Movie Review – மதராச பட்டினம்…



கிழக்கிந்திய கண்பெனியாய் வந்தேறி நானூறு ஆண்டுகள் அடிமைபடுத்தி ஆண்ட வெள்ளையர்கள் பாரத தேசத்தை விட்டு வெளியேறும் பொழுதுகளின் பின்னணியில் பின்னப்பட்ட கதைக்களன். சுதந்திரத்தீயை அணைக்க முற்படும் பிரிட்டிஷாரின் பூட்ஸ்களின் அடியில் சிக்காமல் போராடும் காதலை வரிக்கிறது. வைரமுத்து வரியில் சொல்லவேண்டுமானால் ” ஒரு போர்க்களமும், இரண்டு பூக்களும்” !


உள்ளே வரும் போது “ஸ்டில்லுல ஆர்யா நிக்கரதையும், டிரசையும் பார்த்தா லகான் மாதிரி இல்ல இருக்கு? கிரிக்கெட்டுக்கு பதில் மல்லுயுத்தம் வச்சி மொக்கைய போட்டான்னுவலா? அதே மாதிரி ஒரு இங்கிலீஷ் figure வேற இருக்கே மக்கா?!” என்றும்,  படம் ஆரம்பித்த பிறகு ” வயசான ரோஸ் டைட்டானிக்க பாக்க போறது மாதிரி இவங்களும் கெளம்பிட்டாங்க, அதே மாதிரி பிளாஷ் பேக், அதே மாதிரி நெட்டையா ஒரு பிரிட்டிஷ் வில்லன், லோ கிளாஸ் ஹீரோ…சரி சரி தமிழழக டைடானிக் மச்சி..” என்றும் எண்ணங்கள் வரத்தான் செய்கின்றன.  சிறிது நேரத்திற்கு.  அப்புறம்தான் டைரக்டர் விஜயும், ஆர்ட் டைரக்டர் செல்வ குமாரும் எழுந்து நிற்கிறார்கள்.

படத்தின் ஹீரோ ஆர்ட் டைரக்டர்.  அப்பா.. அந்த கால மவுண்ட் ரோடு, சென்ட்ரல் ஸ்டேஷன், மதராச பட்டினத்தின் தேம்ஸ் நதியாய் கூவம், உடை, ரயில், கட்டிடங்கள் என எல்லாத்தையும் ஆர்ட் டைரக்டர் கண் முன்னே நிறுத்தினால், டைரக்டர் விஜய் நம்மை அங்கேயே கை பிடித்து அழைத்து செல்கிறார்.


பாலாகிட்டா போயிட்டு வந்திட்டா நடிக்கற விதமே வேற என்று  விக்ரம் ஒரு முறை சூர்யாவிற்கு சொன்னதை ஆர்யா மெய்பிக்கிறார். எமியாய் வந்து அந்தப் பெண் நெஞ்சில் நிற்கிறார்.

மணிரத்தனம் படம், லகான், டைடானிக் – இவை எல்லாம் டைரக்டர் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும் போல. ” போட்டியில் ஜெயிச்சிட்டால் இத விட்டு கொடுத்திடறோம், ‘ காலி மேகா காலி மெகா பானி..’ மாதிரியே அதே இடத்தில ஒரு பாடல், உதித்நாராயணன் குரலில் மற்றுமொரு பாடல்..” என லகான் தூவலும், ” எல்லாம் சரியாயிடும், அம்மாவே சொன்னாங்க… தாலி, எங்கம்மா தாலி… கட்டிக்க போறவனுக்கு..” போன்ற சின்னப் பெண்ணின் அச்சு அச்சரமாய் மணிரத்ன வசனங்களும் தூக்கலாய் தெரிந்தாலும், புது மாதிரி முயற்சி, நன்றாய் சொல்லப் பட்டிருக்கிறது.

சமகால நிகழ்வுகளையும், இப்படி ஒரு ப்ளாஷ் பேக்கையும் கலந்து கட்டி இடைவேளை வரை அங்கே இங்கே திரும்ப முடியாமல் பார்க்கிற மாதிரி கொடுத்திருக்கிறார்கள்.

எம். எஸ். விஸ்வநாதன் குரல் அட போட வைக்கிறது. விக்ரம் கூட பாடி இருக்காராமே!

ப்ளஸ் பாய்ண்ட்ஸ்:


1 . மிக வித்தியாசமான கதைக்களனும், அதை சொன்ன விதமும்.

2 . பழைய மதராச பட்டினத்தையும், இன்ன பிற விஷயங்களையும்  கண் முன்னே நிறுத்தும் ஆர்ட் டைரக்சன்.

3  ஆர்யா, எமி மற்றும் நடிகர் பட்டாளம்


மைனஸ் பாய்ண்ட்ஸ்:


1 வேகமாய் செல்லும் படத்தின் இடைவேளைக்கப்புறம் வரும் அந்த சில இழுவை காட்சிகள் ( தயங்காமல் படத்திலிருந்து வெட்டி விடலாம் அவற்றை)

2 கவர்னர், அவ்வளவு போலீஸ், ஆள், அம்பு, சேனை, துப்பாக்கி படைன்னு எல்லோரும் அவ்வளவு துரத்தியும் ஒன்னும் பெருசா ஆவாது அவங்களுக்கு,  துணியை அடிச்சி துவைக்கும் போது துவைக்கற கல்லு ஆடறது கூட கவனிக்காதது… போன்ற சில லாஜிக் உதைக்கும் காட்சிகள்.


மணக்குடியான் வெர்டிக்ட்:


தமிழில் புது முயற்சி, நன்றாய் கொடுக்கப்பட்டுள்ளது.

மதராச பட்டினம் – மனதை தொடும் பட்டினம்.  பாருங்கள்.


:  Movie review – பரமன் பச்சைமுத்து


: Catagory  – மணக்குடி டாக்கீஸ் | மணக்குடியான்.காம்

Share this on Orkut!

Posted in cinema.

Tagged with , , , , .

No comments



ராவணன் – Movie Review…


From www.manakkudiyan.com :


ராவணன் – Movie Review…



பட்டையை கெளப்பும் விக்ரம்,

பச்சைக்கண் அழகியை வைத்து,

படவுலகை திருப்பிப் போட்ட இயக்குனர் எடுத்திருக்கும்

பத்துத்தலை ராவணன் படம்.

 

மகாபாரதம், போர்ச்சூழலில் தாயைத் தொலைத்த பிள்ளை, மும்பை நாயக்கர், தமிழ் நாட்டு திராவிட தலைவர்கள் – என உண்மை சம்பவங்களின் கோர்வையில் படம் தந்தவர், இப்போது ராமாயணத்தை தனது பாணியில் தொட்டிருக்கிறார்.

 

புதுமையான கதை தரேன் பேர்வழின்னு தியேட்டருக்கு வர்றவங்கள ‘ குய்யோ முறையோ’-இன்னு ஓட வைக்கற கோடம்பாக்க இயக்குனர்கள் மத்தியில், ஊரு ஒலகத்துக்கு நல்லா தெரிஞ்ச பழங்கதைய எடுத்து படம் பண்ண தில்லு வேணும். சுளுக்கு புடிச்சிகிட்ட மாதிரி ஆடற பாட்டுக்கெல்லாம் வெளி நாடு போய் படம் எடுக்கிறவங்க மத்தியில, முழுப்படத்தையும் இங்கயே கண்ணுல ஒத்திக்கற மாதிரி ஒரு லோக்கஷன்ல எடுக்க நெஞ்சில மாஞ்சா வேணும். எடுத்திருக்கார். 

 

” ஆழி சூழ் அசோகா வனத்தில கற்ப கையில புடிச்சிக்கிட்டு காப்பாத்தி வந்தவளை போய், சீதா ராமன் சந்தேகப் பட்டா.. ‘ போடா பொறம்போக்கு’ இன்னு சொல்லிட்டு ராவணன் கிட்டயே திரும்பி வந்தா எப்படி இருக்கும்? ” -  இந்த சூப்பர் ’நாட்’-ஐ வச்சிட்டு முன்னையும் பின்னையும் கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு கிளைமாக்ஸ் வைச்சி மணி ரத்னம் ஸ்டைல குடுத்தா எப்படி இருக்கும்? அதான் மேட்டரு!

 

ராமகோபாலனுக்கும், ஆர். எஸ். எஸ் க்கும் பயந்து ராமாயணம் இல்லை-இன்னு சொன்னாலும், படம் பார்க்கும் எல்லாருக்கும் தெரிகிறது எது உண்மையென்று.  போதாக்குறைக்கு அனுமார் ரோலில் வரும் கார்த்திக் தாவி தாவி குரங்காய் குதிக்கிறார். கும்பகர்ணன், விபீஷணன், ராமன், ராவணன், சீதை, சூர்பனகை, அவர் மூக்கை அமுக்கும் இடம், என எல்லாமே உண்டு.

 

விக்ரம் பின்னி பெடலெடுத்திருக்கிறார். 

 

முப்பதெட்டு வயசிலையும்  அவ்ளோ அழகாயிருக்கும் ஐஸ்வர்யா ராய் , எதிரே பார்க்காத அளவிற்கு நடித்து, சொந்த குரலில் தமிழ் பேசி ஆச்சர்யப் படுத்துகிறார்.

 

மழை, ரயில்,  வீட்டு விசேஷம் நடக்கறா மாதிரி ஒரு பாட்டு, கணவன்-மனைவி அன்னியோன்யம் வழிய வழிய ஒரு பாட்டு, ‘ யாரு…. என்னாச்சீ… எத்தனை பேரு…’ போன்ற வசனங்கள், கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போன்ற லோகஷனும் அதை படமாக்கப் பட்ட விதமும், துடுக்காய் ஒரு பெண் பாத்திரம், காதலை வித்தியாசமாய் சொல்லும் வாக்கியங்கள் – என படம் நெடுக மணிரத்தினம் படங்களில் வரும் எல்லா விஷயங்களும் இந்த படத்திலும் இருக்கின்றன.  அதையெல்லாம் மீறி மணிரத்தினம் படங்களில் ‘என்னவோ ஒன்னு, மனசை தொடுமே!’ அது மட்டும் காணோம் இந்த படத்தில். 

 

‘ ஷக்தி நீ அழகா இல்ல, உன் பின்னாடி சுத்தணும் இன்னு தோனல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு’ – போன்ற மணி படத்துக்கான வசனங்களை எழுத சுஜாதா இல்லாதது நன்றாய் தெரிகிறது. சுகாசினி முயற்சிக்கிறார்.

 

 

அந்த உடைந்த சாமி முன்னால் ராகினி அழகா வேண்டுவதை பார்த்திட்டு, வீரையா படிப்படியா என்னமோ சொல்லிட்டே விஸ்வரூபம் எடுக்கற மாதிரி போகும் போது சீன் கட்டாகி வேற சீன் போறதை பார்த்தா அமிதாப் பச்சன் எடிட்டிங் பற்றி சொல்வது உண்மை என்று தான் தோன்றுகிறது. நல்ல சீன், பாதிப்பு ஏற்படுத்தும் முன்னேயே வெட்டப்பட்டுள்ளது.

 

படத்தை ஒரு டைரெக்ஷன்-ல எடுத்து, அப்புறமா ஆர். எஸ்.எஸ், ராமகோபாலன் போன்றோர்களின் தொல்லைக்களுக்கு பயந்து, நிறைய எடிட் பண்ணி தந்ததில என்னோவோ மிஸ் ஆனா மாதிரி வந்திருப்பதை போன்ற ஒரு உணர்வு.  ‘ பத்துத் தலை, அப்புறம் ஒன்னு ஒண்ணா விழும்’ – போன்ற அமிதாப் பச்சானின் வரிகள் இதை உறுதி செய்கின்றன. 

 

பிளஸ் பாய்ண்ட்ஸ்:

1 லோக்கஷன்  – அருவி, காடு, மலை

2  சந்தோஷ் சிவன் – மணிகண்டன் ஒளிப்பதிவு

3  விக்ரம், ஐஸ்வர்யா, பிரிதிவிராஜ் – நடிப்பு.

4.  A R ரஹ்மான்

5   ரிச்னெஸ்

6  புதிதாய் சொல்லப்படும் விதம்

… இன்னும் நிறைய இருக்கு.

 

மைனஸ் பாய்ண்ட்ஸ்:

1  என்னவோ ஒன்னு மிஸ்ஸிங்

2 . பாதிப்பு ஏற்படுத்தா கிளைமாக்ஸ்

3  முக்கியமான திருப்பங்கள் ( ரயிலிருந்து ஜஸ்ட் லைக் தட் ஐஸ்வர்யா போவது,…) சாதாரணமாய் போவது

4  சில இடங்களில் கோட்டை விட்ட லாஜிக்

….

….லிஸ்ட்  போதுமே

 

” மணிரத்னத்தை  இந்த மூணு லாங்குவேஜி வேலையெல்லாம் உட்டுட்டு ஒழுங்கா தமிழ்ல மட்டும் கவனம் செலுத்தி ஒரு படம் பண்ணி பட்டைய கேளப்ப சொல்லணும் அலைபாயுதே மாதிரி, அப்புறம் வேணும் இன்ன ரீமேக் பண்ணிக்கட்டும்’ – என்று என் நண்பன் சொல்வது சரி என்றே தோனுகிறது.  அல்லது ’ எடுக்கறதா எடுங்க, அப்புறம் ராமகோபாலனை பாத்துக்கலாம்’  – இன்னு சொல்ல தோணுது.  

 

மணக்குடியான் வெர்டிக்ட்:

பிரமாண்டம், ‘ மணி’ சரி, ‘ ரத்தினம்’ எங்கே ?

ஒரு முறை பாருங்களேன் !

 

: Movie Review  – பரமன் பச்சைமுத்து 

 

: Catagory – Manakkudi Talkies   | Manakkudiyan.com




Back to Main Page–à





Share this on Orkut!


 

Posted in Movies.

Tagged with , , , , , , , , , , , , , .

No comments



Rajini’s எந்திரன் The Robot – Latest update…


From www.manakkudiyan.com



 Rajini’s எந்திரன் The Robot – Latest update…


 



‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து… டிகிரி டிகிரியாக எகிறி வரு கிறது ‘எந்திரன்’ ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே?’ என்று எட்டிப் பார்த்ததில் இருந்து…


ஹீரோ, வில்லன்… இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல் களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!


‘உப்புக் கருவாடு… ஊறவெச்ச சோறு…’ என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ள லும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!


‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் ‘எந்திரன்’ மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!












சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, ‘காய்ந்துகிடக்கும்’ சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. ‘நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!’ என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!



‘எந்திரன்’ க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!


படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல… எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஷோபா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் ‘ஐ ரோபாட்’ போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!


அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!


‘அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி’, ‘வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்… வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்’, ‘அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி’ இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!


ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10… ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்…. அநேகமாக, துபாய்!


ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!


முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், ‘எந்திரன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!


‘எந்திரன்’ டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!


: Taken from Ananda Vikatan.  Thanks to Vikatan.


: Catagory – Manakkudi Talkies | Manakkudiyan.com

Share this on Orkut!


Back to Main Page -à  

Posted in Manakkudiyan.com, Movies.

Tagged with , , , , , , , , .

No comments



It is not WHEN you start, but…


From www.manakkudiyan.com :

 



A school in New Delhi was celebrating by bursting the crackers and distributing sweets to whoever passes by.  Almost all the television channel screamed the name “ Arjun Vajpaye”. News papers lines read “  ‘ Young Wonder’, ‘ India scales new height’, ‘ Arjun Vajpayee scaled Mount Everest at age 16’, ‘ Youngest  Everest Climber’, ‘Arjun Vajpaee to receive medal from President of Nepal Ram Baran Yadav’.


The matter is – Arjun Vajpayee scaled Mount Everest on May 22. Arjun who is just 16 became the youngest Indian to plant the tricolour on the snow-clad summit of the 8,848 meter mountain.  


Whoever saw or read or heard the news would have said, “ ‘oh wow’, ‘ ada!’, ‘ Super!’”.  Everybody might have felt very happy for the achievement.



Hearing her son’s Himalayan achievement, his mother Priya Vajpai cries and laughs and says “I have no words to describe my feelings…” .  The young achiever says “He never expected such a welcome”.


Today Arjun Vajpayee entered into history, his name has been written in the history. He stands tall, no..no  stands taller than and stands above the Mount Everest.  He has conquered Mount Everest. Without knowing anything about his background each one of us can tell ‘There is enormous effort, determination, support from his parents and coach..’.


What made me to open my eyes wider is that last but one line about him, which read “Though Arjun began climbing only three years ago, he took to the sport immediately…”.


‘ Ada… He began climbing only three years ago and went on to defeat the peak called Mount Everest?! So many people comes to Himalayan range, practices for years, still trying. But…!”.


I got it. It is not WHEN ONE STARTS, IT IS HOW ONE STARTS and HOW HE DOES THINGS MAKE ALL THE DIFFERENCE.


Let it be starting a new venture, entering into a new business, switching over to a profession newly, learning public speaking, neutralizing the MTI English language (Mother-Tongue-Influenced), putting effort for losing the weight towards getting the shape of the body, learning a new skill, working on making a relationship right….let it be anything.   I  don’t need to worry, no need to fuzz about “ If only I would have come to this many years ago… all these people exists here for ages, I am just beginning…”. It is okay. It is not about when I start, it is not about when you start. You are here now, it is all about how I start and how I do I proceed.


All said and done, A R Rahman just began with ‘Roja’. There were no question about ‘ how long he was here in the industry, what were his achievements..?’.  How he started and how he did things in ‘Roja’ made all the difference.


I understand – It is not when one starts, it is how one starts and how he does things make all the difference.  You are never late. Whatever could be your mission, whatever could be your vision, you can reach to your destination.


It is not when you start, it is how you start and how you do things that make all the difference….!


: Thoughts Unlimited – by Paraman Pachaimuthu  


: Category – Thoughts Unlimited   | Manakkudiyan.com

Posted in Thoughts Unlimited.

Tagged with , , , , , , .

No comments



சிங்கம் – Movie Review…


From www.manakkudiyan.com : 



சிங்கம் – Movie Review…




நெல்லைச்சீமை அம்மியில், போலீஸ் ‘சாமி’ வீட்டு குழவியால், ஹரி ட்ரேட் மார்க் மிளகாய், உப்பு, மல்லி வைத்து அரைத்து, தாமிரபரணி தண்ணி கலந்து தாளித்து, நன்றாய் பரிமாறப் பட்ட மசாலா. உப்பும், ஓரப்புமாய், ஏற்கனவே சாபிட்டது போலிருந்தாலும் ‘சுர்ர்ர்’ என்று இருக்கிறது. கார சாரமாய் மணக்கிறது.

 

 ’ ரஜினியை விரும்பவும் வேண்டாம், வெறுக்கவும் வேண்டாம். வெறுமனே பாருங்கள், உங்களுக்கு பிடிக்கும் !’ என்று தான் ஆசிரியராய் இருந்த ஒரு குமுதம் இதழில் எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னது போல, சூர்யாவை வெறுக்கவும் இல்லாமல், விரும்பவும் இல்லாமல் வெறுமனே பார்த்தால் , உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படத்தில். சூர்யாவின் இருபத்தியைந்தாவது படமாம், கிடைத்த வாய்ப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். ஜீப்பைப் பிச்சி எரிந்து கொண்டு வரும் கற்பனை கொஞ்சம் ஓவரா என்றாலும், ‘சரி விடு மச்சி !’ இன்னு பாக்கலாம்.

 

திருநெல்வேலி, தூத்துக்குடி என்று மாறியிருந்தாலும் கூட, படம் முழுக்க ‘சாமி’யின் பிம்பங்கள் வந்து போய்கொண்டே தான் இருக்கிறது. விவேக்கின் ‘ சொம்பு’ ரக வசனங்களும், இடைவேல்லைக்கு அப்புறம் வரும் வில்லன் – போலீஸ் ஹீரோ, ஊரிலிருந்து வரும் ஹீரோ வின் அப்பா காட்சிகள், அனுஷ்கா கதாபாத்திர அமைப்பு, கெட்ட வார்த்தைகளை குறிக்கும் எழுத்துக்களை கொண்ட வசனங்களின் அமைப்பு – என ‘சாமி’ பாட்டையிலேயே பயணித்திருக்கிறார் டைரக்டர். 

 

வெறுமனே இடுப்பை மட்டும் ஒடித்து ஆடிட்டு போகாமல், படம் முழுக்க வந்து போகிற மாதிரி ஒரு ரோல்  அனுஷ்காவிற்கு.

 

நெட்டில் அலைந்த சர்தார்ஜி வண்டி கடத்தும் ஜோக் படத்தில் கொண்டுவந்தது, ‘ ஸ்பீட் பிரேக்கர்’ போல வந்து நிற்கும் பாடல்கள், அடுத்தது இதுதான் இன்னு யூகிக்க முடியும் காட்சிகள் இருந்தாலும்,  தொய்வில்லாமல் இழுத்து டைட்டாய் கட்டப்பட்ட திரைக்கதையும், கொடுக்கப் பட்ட விதமும் மற்ற எல்லா விஷயங்களையும் சரி செய்து விடுகின்றன.  


ராதா ரவி, நிழல்கள் ரவி, நாசர், ‘கில்லி’ அம்மா, ‘காக்க காக்க’ போன்ற டீமில் வருபவர்கள் என்று எல்லோரும் கொடுக்கப் பட்டதை செய்திருக்கிறார்கள்.

 

விவேக் பெஸ்ட் இல்லையென்றாலும், கொஞ்சம் பரவாயில்லை ரகம். டி.வி யில் பிட் பிட்டாய் போட்டே ஹிட்டாக்கி விடுவார்கள் சன் டி.வி. குழுமத்தினர்.

 

மைனஸ் பாயின்ட்:

 தட தட என்று எக்ஸ்ப்ரெஸ்ஸாய் பயணிக்கும் படத்தில் முட்டுக்கட்டையாய் நிற்கும் பாடல்கள்.

‘ பசிக்கு பொங்கல் திருடினா சரி, ருசிக்கு பாயாசம் திருடினா சரி இல்ல’ – ரகமாய் படம் முழுக்க நம்மை பஞ்சராக்கும் ‘பஞ்ச் டயலாக்ஸ்’

பெருசா பில்ட் அப் கொடுத்து, திடீரென்று தெருவில் நிறுத்தப்பட்ட பிரகசாஹ் ராஜ் பாத்திரப் படைப்பு.

வாழ்வா சாவா என்று போகும் காட்சி அமைப்புக்கு நடு நடுவே வந்து நிற்கும் அனுஷ்கா காதல். 

 


பிளஸ் பாய்ன்ட்:

சூர்யா

எக்ஸ்ப்ரெஸ் ஸ்க்ரீன் ப்ளே.

கொடுக்கப் பட்ட விதம்.

 

யாரோ சொன்னார்கள், விஜய்க்கு பண்ண கதையாம், குறை சொல்லி மிஸ் பண்ணிட்டாராம். ஐம்பதாவது படத்தில் அவர் விட்டதை இருபத்தைந்தாவது படத்தில் சூர்யா பிடித்து விட்டார்.

 

மணக்குடியான் வெர்டிக்ட்:

பலஹீனமாய் தெரிந்தாலும், பலமாய் கர்ஜிக்கும் மசாலா சிங்கம்! பார்க்கலாம் !

 

திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து      |   மணக்குடியான்.காம்

Share this on Orkut!


Tags:

Posted in cinema.

Tagged with , , , , , , , , , .

No comments



Photo-Dumeel:சார் லட்டு…!



From www.manakkudiyan.com :

Photo-Dumeel:சார் லட்டு…!



அல்வாவா…? அம்புட்டயும் அம்மாவுக்கு குடுத்தாச்சி,

இங்க வெறும் லட்டுதான்…. !

 

:பரமன் பச்சைமுத்து   | மணக்குடியான்.காம்

Share this on Orkut!


 


Back to Main Page….–>


 

Posted in Uncategorized.

Tagged with , , , , .

No comments



நபிகள் நாயகம்: தினமும் இறைச்சி – இறைவன் கோபமடைகிறான்.




From www.manakkudiyan.com :


நபிகள் நாயகம்: தினமும் இறைச்சி – இறைவன் கோபமடைகிறான்.



சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.


அதாவது, இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முதும¨ அடைந்துவிடுவீர்கள்.




மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.


குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.


இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோக் கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.


உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.


வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.


இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியைத் திண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.


: Courtesy – Webdunia



Share this on Orkut!


 


Back to Main Page….–>


 

Posted in Uncategorized.

Tagged with , , , .

No comments



சித்தர்கள்…





சித்தர்கள்…


 


: Taken from Vikatan.





ஆனந்தம்… பரமானந்தம்!










வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி பற்றிய சம்பவம் ஒன்று சொல்வார்கள். அவர் மண்ணில் ஸ்தூல உடலுடன் வந்தபோதே, அவர் மீது பக்தி கொண்ட அன்பர் ஒருவர், வள்ளலாரின் திருமேனியை அப்படியே களிமண்ணால் பொம்மையாகச் செய்து நெருப்பில் சுட்டு, வண்ணம் பூசி, அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாராம்! எவரையும் புண்படுத்தவோ அலட்சியப் படுத்தவோ எண்ணாத கருணை மனம் கொண்ட ராமலிங்க வள்ளலோ, அந்த பொம்மையை வாங்கி வெகு அலட்சியமாகத் தள்ளி வைத்தாராம்.


அதைக் கண்டு துடித்துப்போனவர், ”ஏன் சாமீ… அந்த மண் பொம்மையை அலட்சியம் செஞ்சுட்டீங்க?” என்று வேதனையுடன் கேட்க, ”அப்பா… இந்த உடம்பு மண்ணால் தான் பெரும்பாலும் உண்டாகிறது. இந்த மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக்கும் சாகாக் கலையை உலகுக்கு உரைக்கவே இறைவன் என்னை அனுப்பினான். இதை உணர்ந்து, ஆழ்ந்து ஈடுபட்டு இந்த மண்ணுடம்பை பொன் னுடம்பாக்கினேன். நீயோ பொன்னுடம்பை மண்ணுடம்பாக ஆக்கி வந்திருக்கிறாய். ‘பொன் உடம்பாக்கிக் கொள்ளும் ரகசியத் தைக் கற்க எவரும் இல்லையே’ என்று வருந்தி வரும் வேளையில், நீ பொன்னுடம்பையும் மண்ணுடம்பாக்கினால் நான் எப்படி மகிழ்வேன்?” என்றாராம்.


யோசிக்கவேண்டிய விஷயம் இது! வள்ளலார் பொன்னுடம்பு பெற்ற ரகசியம் முழுவதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும், நாடிசுத்தி செய்து, உடல் அழுக்கு (கார்பன்) நீங்கி, சுவாசத்தை ஏதோ ஓர் அளவில் ஒழுங்குபடுத்துவதன் மூலம் நரை, திரை, மூப்பு முதலான நோய்களின்றி உடம்பு பொன்னாகிறது என நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. ‘வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு’ என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார்.


”வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.


அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர் களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத் துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’ என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்” என்கிறார்.












பொன்னுடம்பு பெற்ற வள்ளலார், கடவுளை ஆறு வேளை… அதாவது சூரியோதயம், உச்சிப் பொழுது, சாயரட்சை, மாலை, யாமம் மற்றும் வைகறையில் தியானம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். அந்த தியானம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும்போது, ‘எக்காலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்தவேண்டும்’ என்று தெளிவுபடுத்துகிறார்.


புருவமத்தி என்பது சுழுமுனை நாடி. அந்தக் கரணம் அதாவது மனம், புத்தி என்கிற இடது வலது சுவாசங்களை ஒருமுகப்படுத்துவது என்பதன் மூலம் பொன்னுடம்பைப் பெறுவதையே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்ற மூன்று ரகசியக் குறியீடு களைத் திருவருட்பாவில் பல இடங்களில் அவர் வெளிப் படுத்துகிறார். விந்து வீணாக வெளியேறாமை போகாப் புனல்; சாகாத்தலை என்பது இறப்பற்ற பெருநிலை- அதாவது மரணமிலாப் பெருவாழ்வு; வேகாக்கால் என்பது காற்று பற்றிய ரகசியம் (கால் என்பது காற்றைக் குறிக்கும் சொல்); வெந்து அழியாத பிராணவாயுவே வேகாக்கால். தீய்த்துக் கெடுக்கப்படாத பிராணனாகிய காற்று – உடம்பு முதிர்ந்து வாடிக் கெடாதபடி பிராணனை அடக்கும் வித்தைதனை அறிந்தால் மரணம் இல்லை என்கிறார்.


‘சாவாதிருக்கும் சாகாக்கல்வி’ என்பதை நமக்குக் கொட்டித் தந்தவர் கள் தமிழகத்துச் சித்தர்கள். அவர்கள் சொன்ன வழிமுறைகளையெல்லாம் சுருக்கிச் சொன்னால், மூன்று வழிகள் கிடைக்கின்றன. ஒன்று – ரசவாத முறை; அடுத்தது – குண்டலினி யோகம்; மூன்றாவது உல்டா சாதனை எனும் தலைகீழ்ப்பயிற்சி முறை எனும் மறித்தேற்றும் முறை எனப் பட்டியலிடுகிறார் பேராசிரியர் டி.என்.கணபதி.


பாதரசம், கந்தகம், காக்கைப் பொன் என்கிற மைக்கா ஆகிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி, ரசாயன யுக்திகளால் (கெமிக்கல்) சாவா நிலைக்கு முயற்சி செய்துள்ளனர். குண்டலினி யோகத்தில் முன் சொன்ன வேதிப்பொருட்களுக்கு பதிலாக நம்முடைய உடலில், தலையில் சகஸ்ராரத்தில் ஊறிவரும் உயிர்ச்சாறு பருகுவது விளக்கப் படுகிறது. இதனை மெய் யாகம் என்கிறார் திருமூலர்.


‘தமிழ்ச் சித்தர் மரபு என்கிற நூலில், பேராசிரியர் டி.என்.கணபதி அழகாக இதுகுறித்து விளக்குகிறார்… ”ஓர் இரும்புத் துண்டை நீரில் போட்டால், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், அதே இரும்புத் துண்டைக் கொண்டு, படகு செய்து நீரில் மிதக்க விட முடிகிறது; கடலைக் கடக்க உதவுகிறது. அதேபோல், பிண்டநிலையில் ஒரு கரையில் இருக்கும் ஆன்மாவை, மறுகரையில் அண்ட நிலையில் இருக்கும் பரமான்மாவுடன் இணைக்கிற படகாக இந்த உடம்பு பயன்படுகிறது. மூழ்கும் இரும்பை மூழ்காத படகாக்குவது போல், அழியும் உடம்பை அழியா உடம்பாக்கும் விந்தையே குண்டலினி யோகம்!”


அடுத்து… மறித்தேற்றும் முறை! சித்தர்களால் சித்தர்களுக்கு மட்டுமே புலப்படுத்தப்படும் ரகசியம் இது. விந்துவை மறித்து மேலேற்றும் முறை. இந்த உல்டா சாதனையை நாத சித்தர்கள் பயில் கிறார்கள். இந்த உயரத்துக்கெல்லாம் பாயாவிடினும் காற்றைக் கையா ளும் கலையை அறிந்தால் வலுவான, பொலிவான உடலும் உள்ளமும் ஆன்மாவும் நம் வசமாவது உறுதி. வள்ளலார், ‘சாகாத்தலை வேகாக் கால்’ என்கிறார். வேறு சில சித்தர்களோ சிறிது மாற்றி, ‘சாகாக்கால் வேகாத் தலை’ என்கின்றனர். ‘சாகாக்கால்’ என்று பிராணாயாமத்தையே பேசுகின்றனர். ‘வேகாத்தலை’ என்பது சகஸ்ராரமாகிய தலையில் ஊறும் அமிழ்தைக் குறிக்கிறது. ஆக கால், தலை ஆகிய இந்த இரண்டும் நமக்குப் புரிபடாததால், ‘தலைகால் தெரியாமல் ஆடுகிறான்’ என்று ஜாடை பேசினர்.


இதேபோல், ‘விட்ட குறை தொட்ட குறை’ என்கிற பரிபாஷை, மூச்சை நாசிவழி விட்ட குறை என்றும், நடுவில் மறித்து ஏற்றி சுழு முனையில் பாயவிடுவதே தொட்ட குறை என்றும் பொருளாகிறது என தமிழ்ச் சித்தர் மரபு நூல் விளக்குகிறது.


சிவவாக்கியர் எனும் சித்தர், கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம் நம்மை ஒரு பிடி பிடிக்கிறார்: ‘அடேய்… நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை, ஒரு ரவுடி கண் வைத்து, அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? ‘வெட்டிவிடுவேன்’ என்று புறப்படு வாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம்வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள்… காலனைக் கபளீகரம் பண்ணவேண்டாமா?’ என்கிறார்.



‘வடிவு கண்டு கொண்ட பெண்ணை
வேறொருவன் நத்தினால் விடுவனோ
அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’


என்ன அழகான உவமை?! ஆனால், அதைத் தடுப்பது எப்படி எனும் கேள்வி வரும். இப்படிக் கேட் பவருக்குத் திருமூலர் பதில் சொல் கிறார்… ‘காற்றைப் பிடித்தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!’


காற்றை எப்படிப் பிடிப்பது?





- ஆனந்தம் தொடரும்…
படம்: கே. ராஜசேகரன்

:Thanks to Vikatan.

Share this on Orkut!


Tags: , , , , , , , , ,




Back to Main Page….–>


 

Posted in Manakkudiyan.com, Religion, Seeker's Hut.

Tagged with , , , , , , , , , , , .

No comments



பிரபாகரனின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடையதா????…


From : www.manakkudiyan.com :

Is it Prabhakaran’s body or body of a looks alike Srilankan Army man’s body ?


பிரபாகரனின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடையதா????…
















தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடையதா????…
[ வியாழக்கிழமை, 21 சனவரி 2010, 02:47.57 PM GMT +05:30 ]
 
இந்தக் காணொளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொப்பி போட்ட இலங்கை இராணுவ வீரரை மட்டும் உற்று நோக்குங்கள்.. இலங்கை இராணுவமும் அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலமென்று காட்டிய உருவத்துடன் இவர் பொருந்துகிறாரா இல்லையா?? … என்பதை சிந்திக்கவே இந்தக் காணொளியை பகிர்ந்துள்ளோம். உங்கள் பார்வைக்கு, மிகவும் அவதானமாக பாருங்கள்.








:Courtesy – Tamilwin.com


: Category – Happening  | Manakkudiyan.com

Share this on Orkut!


Tags: , , , ,

Posted in Happening, Manakkudiyan.com.

Tagged with , , , , , .

No comments